top of page
lexhodie

சட்டப் பிரிவு -21

Priyanga

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. இவ்வுரிமைகள் நமது அரசியல் அமைப்பு சாசனத்தில் பகுதி III & IV-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு மனிதன் இவ்வுரிமைகளை அனுபவிப்பதற்கு முதலில் உயிருடனும் உடல் நலத்துடனும் இருக்க வேண்டும். இல்லையெனில் வழங்கப்பட்ட உரிமைகள் பயனற்றதாகும். அனைத்து உரிமைகளையும் வழங்கிவிட்டுத் தனி நபரின் வாழ்க்கை உரிமையைப் பாதுகாக்கவில்லை என்றால் மற்ற உரிமைகள் இருந்தும் என்ன பயன்? ஆதலால், இத்தகைய இன்றியமையாத உரிமை, சட்டப்பிரிவு – 21–ல் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வுரிமை பின்வருமாறு படிக்கிறது :

உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு :-

“ஒருவரது உயிரோ உடல்சார் உரிமையோ, சட்டம் விதித்தமைத்துள்ள நெறி முறைப்படி அன்றி, பறிக்கப்படுதல் ஆகாது”

விளக்கம்:

சட்டத்தால் நிறுவப்பட்ட செயல்முறை இன்றி, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. கூடாது.

அதாவது, ஒருவரிடமிருந்து இவ்வுரிமையைப் பறிக்க கீழ் கூறிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:-

  • ஒரு சட்டம் இருக்க வேண்டும்.

  • அச்சட்டம் ஒரு நடைமுறையை (procedure) வகுத்திருக்க வேண்டும்.

  • ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பறிக்கும் பொழுது ஒரு நிர்வாகி இந்த நடைமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும்.

இத்தகைய நடைமுறைகள் நியாயமானதாக(fair, resonable and just) இருக்க வேண்டும் என்று மேனகா காந்தி வழக்கிற்குப் பிறகு நிறுவப்பட்டது.


இச்சட்டப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள உரிமையானது இந்தியக் குடிமக்களுக்கு மட்டும் இன்றி குடிமக்கள் அல்லாது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் வலியுறுத்தியது.

அதனால், வெளிநாட்டை சேர்ந்த நபரோ அல்லது இந்நாட்டின் குடிமகனோ, எவராக இருப்பினும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது இந்நாட்டின் கடமையாகும்.

சட்டப்பிரிவு – 21- ல் வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை பின்வரும் உரிமைகளை துணை தலைப்புகளாக உள்ளடிக்கியுள்ளது:-

  1. வாழ்வாதார உரிமை : மனித கண்ணியத்துடன் (human dignity) வாழ்வதற்கான உரிமையுடன், வாழ்வாதார உரிமையும் இப்பிரிவில் உள்ளடங்கியுள்ளது. (Right to Livelihood)

  2. கல்வி உரிமை – சட்டப்பிரிவு 21A (Right to Education )

  3. கைதிகளின் உரிமை மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவலுக்கு எதிரான உரிமை (Right of Prisoners and right against illegal detention)

  4. விரைவான விசாரணைக்கான உரிமை. (Right to Speedy Trial)

  5. சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமை.(Right to Clean environment)

  6. கண்ணியத்துடன் இறக்கும் உரிமை.(Right to die with dignity)

  7. கொடிய நோயை வெளிப்படுத்தும் உரிமை.(Right to Disclosure of dreadful diseases)

  8. தனியுரிமைக்கான உரிமை.(Right to Privacy)

  9. வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.(Right to choose life partner)

29 views0 comments

Recent Posts

See All

Comentários


Image by Bill Oxford

For the INQUISITIVE CLASS

bottom of page